Advertisment

புத்தகக் கண்காட்சியில் திருடிய பிரபல நடிகை கைது

actress Rupa Dutta arrested theft case

மேற்கு வங்க திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ரூபா தத்தா தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் தோன்றியுள்ளர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குநர்அனுராக் கஷ்யாப்தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டியதன் முலம் வங்காள மொழியைதாண்டி பிறமொழிகளிலும்பிரபலமானார்.

Advertisment

இந்நிலையில் புத்தக கண்காட்சியில் திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் சர்வதேச புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு வந்த நடிகை ரூபா தத்தா குப்பைத்தொட்டியில் மணி பர்ஸ் ஒன்றை வீசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகை ரூபா தத்தாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரூபா தத்தாவைகைது செய்த போலீசார் விதான் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் தான் புத்தகக் கண்காட்சியில் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து சில மணி பர்ஸ்களும் ரூ.70 ஆயிரம் ரொக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

Advertisment

Rupa Dutta west bengal anurag kashyap Bollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe