Skip to main content

நடிகை ரோஜாவிற்கு திடீர் அறுவை சிகிச்சை 

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

roja

 

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவிற்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை அவரது கணவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஒரு குரல் பதிவின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில், "ரோஜாவிற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இந்த அறுவை சிகிச்சை முன்னரே நடந்திருக்க வேண்டியவை. முதலில் தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. பின், கரோனா காரணமாகத் தள்ளிப்போனது. நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி. அவரது ரசிகர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ரோஜாவின் உடல்நலம் குறித்து தொடர்ந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" எனப் பேசியுள்ளார். 

 

நடிகை ரோஜாவிற்கு என்ன வகையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.  

 

 

சார்ந்த செய்திகள்