Published on 12/09/2018 | Edited on 12/09/2018

நடிகை ரேவதி தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், அவரது குழந்தை மகி குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நான் கடந்து வந்திருக்கிறேன். தாய்மை என்பதுதான் ஒரு பெண்ணின் முழுமை. நானும் அதற்காக ஏங்கியுள்ளேன். சோதனைக் குழாயின் மூலமாக ஐந்து வருடங்களுக்குமுன்பு நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அந்தக்குழந்தைக்கு மகி எனப் பெயரிட்டுள்ளேன். மகி நான் தத்தெடுத்து வளர்த்துவரும் குழந்தை எனக் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எனக் கூறியுள்ளார்.