Advertisment

“இருவரையும் மிஸ் செய்கிறேன்” - பிக்பாஸ் குறித்து நடிகை ரேகா!

rekha

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

Advertisment

தமிழில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீஸன் ஒளிபரப்பானது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், இந்த வருட நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், ரியோ, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஆஜித் காலிக், ஷிவானி, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி முருகதாஸ், ஷனம் ஷெட்டி, கேப்ரல்லா, ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலிருந்து, ரேகா எவிக்ட் செய்யப்பட்டார். அப்போது, சக போட்டியாளர்களான ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் கண்ணீர்விட்டனர். ரேகா வெளியேறியபின் நடிகை ரேகா இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரையும் மிகவும் மிஸ் செய்வதாகப் பதிவிட்டுள்ளார்.

Biggboss rekha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe