Advertisment

"சாய் பல்லவியை மிரட்டுவதை நிறுத்துங்கள்" - நடிகை ரம்யா காட்டம்  

actress ramya support sai pallavi controversy

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில்ராணாவுடன்இணைந்துவிராடபருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிநக்சலைட்டாகநடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன.அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது.

Advertisment

அதில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர்ஃபைல்ஸ்திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலைசெய்யப்படுவதாகக்காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர்பண்டிட்டுகள்கொல்லப்படுவதும்,கரோனாகாலத்தில் மாடுகளை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர்களைவழிமறித்து அவர்களைஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித்தாக்குதல்நடத்திக்கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்"என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சாய் பல்லவிக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதைநிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அப்படிஇருக்கையில் பெண்களுக்கு மட்டும் உரிமை இல்லை? நல்ல மனிதனாக இரு என்று கூறினால் உடனே தேசத் துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் 'கோலி மாரோ' என்றால் ஹீரோ என்று சொல்லுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ramya sai pallavi the kashmir files
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe