/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/896_2.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ரம்யா. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான சார்லி 777 என்ற படத்தை பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து வியந்த ரம்யா தனது சமூக வலைதள பக்கத்தில் படம் நன்றாக இருந்தாகபகிர்ந்துள்ளார். பலரும்படம் குறித்தானரம்யாவின் பதிலை வரவேற்றுள்ளனர். ஆனால் 'ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே'என்ற பெயரில் சமூக வலைதளத்தில் கணக்கு வைத்திருக்கும் மர்ம நபர் ஒருவர்மட்டும் ரம்யாவை ஆபாசமாக பேசியுள்ளார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த நடிகை ரம்யா பெங்களூருவில் உள்ள அல்சூர் கேட்காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்யாவை ஆபாசமாக பேசிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)