rakul preet singh

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.

Advertisment

இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதிக்குப்பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபானக் கடைகளையும் திறக்கஉத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்மாஸ்க் அணிந்துகொண்டு கையில் இரண்டு பாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்வதுபோன்ற வீடியோ வைரலானது. அந்த வீடியோவைபகிர்ந்துவர், 'லாக்டவுனில் என்ன வாங்குகிறார். ஒருவேளைஅது மதுபானமா' என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரகுல், "மெடிக்கல் ஷாப்பில்ஆல்கஹால் விற்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது"என்றார்.