actress Rakhi Sawant marriage issue

Advertisment

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், தமிழில்‘என் சகியே’, ‘முத்திரை’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.இவர் டெல்லியைச் சேர்ந்த ஆதில் கான் குரானி என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் சிம்பிளாக பதிவு திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால், ஆதில் கான்ஒரு ஆங்கில ஊடகத்தின் பேட்டியில்இந்த திருமண தகவலைமறுத்துள்ளார். இதுகுறித்துநடிகைராக்கி சாவந்த், "எனக்கும் அவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதற்காகநான் மதம் மாறினேன். அப்போது அதை வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கேட்டு கொண்டார். அதனால் நான் வெளியில் சொல்லவில்லை. ஆனால், இப்போதுஏன் அதை மறைக்கிறார் எனத்தெரியவில்லை. அவரது குடும்பத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டு இதனைமறைக்கிறார் என நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

மற்றொருபேட்டியில் பேசிய நடிகை ராக்கி சாவந்த்,ஆதில் கான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும்அவரின் போனில் சில விஷயங்களைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பார்த்ததகவலை வெளியில் சொல்ல மறுத்துவிட்டார்.

Advertisment

நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு ரித்தீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைதொடர்ந்து ஆதில் கானை காதலித்து பதிவு திருமணம் செய்து பின்பு அவர் மீதும் சந்தேகம் அடைந்துள்ளதாகச் சொல்லியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.