/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/125_28.jpg)
நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகை ராதா விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று மலை தூவி மரியாதை செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் அவருடன் சினிமாவில் நடித்து முடித்த பிறகு நேரடியாக பார்க்கவில்லை. ஒரு நாள் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பில் பார்த்தேன் அவ்வுளவுதான். அவருக்கு பிறந்தநாள் வரும்போது அவரிடமும் பிரேமலதாவிடமும் பேசுவேன். என் பொண்ணு கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க அவுங்க வீட்டிற்கு போயிருந்தேன். விஜயகாந்தை பார்க்க முடியவில்லை. பிரேமலதாவிடம் கொடுத்து விட்டு வந்தேன். பின்பு அவ்ளோ கஷ்டத்திலும் கூட என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பிரேமலதா வந்தாங்க. அதை நான் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பா அவருடைய ஆசிர்வாதத்துடன் தான் வந்திருப்பாங்க. அது எனக்கு பெரிய விஷயம். அவரை இப்படி வந்து பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் செய்திருக்கிற நல்லது நம்ம கூடயே இருக்கும்” என கண்கலங்கினார். பின்பு விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)