Advertisment

ரூ. 50 கோடி வீட்டை விற்று ரூ. 140 கோடி வீட்டை வாங்கிய பிரபல நடிகை...

கடந்த 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் பெற்றார். இதனையடுத்து பாலிவிட்டில் நடிகையாக வலம் வந்தவர், படிபடியாக உயர்ந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார்.

Advertisment

priyanak chopra

இதன் பின் பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இந்த வீடு நிக் ஜோனசுக்கு சொதமான வீடு, இதன் விலை 50 கோடி ஆகும். மிகவும் பிரம்மாண்ட வசதிகளை கொண்ட இந்த வீட்டை தற்போது நிக் விற்றுவிட்டார்.

அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இன்னொரு புதிய வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்து இருப்பதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

Advertisment

புதிய வீட்டின் மதிப்பு ரூ.140 கோடி என்று கூறப்படுகிறது. தனது சகோதரர்களுடன் சேர்ந்து நிக் ஜோனஸ் ஹேப்பினஸ் பிகின் டூர் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உள்ளார். இந்த இசை சுற்றுலாவுக்காக நிக் ஜோனஸ் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது.

Priyanka chopra
இதையும் படியுங்கள்
Subscribe