பிரபல சீரிய நடிகை மன அழுத்தத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
க்ரைம் பேட்ரோல் என்னும் இந்தி டி.வி. தொடரில் நடித்து பிரபலமானவர் ப்ரெக்ஷா மேத்தா. அவருக்கு வயது 25. கரோனாவால் தேசிய ஊரடங்கு இரண்டு மாதங்களாக அமலில் உள்ள நிலையில் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான இந்த ஊருக்குச் சென்று வீட்டில் தங்கியுள்ளார்.
ஷூட்டிங்கும் அனைத்து நின்றுபோனதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த ப்ரெக்ஷா வீட்டில் தனது ரூமிலுள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடுமையான மன அழுத்தத்தில் ப்ரெக்ஷா இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக அவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில் ‘கனவில் மரணம் ஏற்படுவது கொடுமையான ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.