சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலகமே கரோனா வைரஸால் பீதியடைந்துள்ள நிலையில் பல நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்படுகிறது, ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் பிரபல பரதநாட்டிய கலைஞரும் உத்தரா உன்னி கரோனாவால் தானது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகளான உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இந்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் அச்சத்தால் பலரும் தங்களின் நிகழ்வுகளை தள்ளிப்போடும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உத்தரா உன்னியும் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.
இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாள சினிமாவில் பிரபல நடிகையான இவர், தேர்ந்த பரதநாட்டிய பயிற்சியாளர். கொச்சியில் டெம்பிள் ஸ்டெப்ஸ் என்ற பெயரில் நடன பள்ளி வைத்திருக்கிறார்.