Advertisment

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் பூர்ணிமா ரவி

actress poornima ravi update

யூட்பில் பிரபலமான பூர்ணிமா ரவி தற்போது சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார்.

Advertisment

இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். ’ஹீரோயின் மெட்டீரியல்' என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe