pooja kumar

Advertisment

'காதல் ரோஜாவே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன்பிறகு அவ்வப்போது ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வந்த இவர், ‘விஸ்வரூபம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'உத்தம வில்லன்', 'மீன் குழம்பும் மண் பானையும்', 'விஸ்வரூபம் 2' ஆகிய படங்களுக்குக் கணிசமான வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், பூஜா குமாருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரது கணவர் விஷால் ஜோஷி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர்தான் இருந்தோம்,இப்போது மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் மகிழ்ச்சியடைகிறோம். நான் எதிர்பார்த்த மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும் குட்டி நாவ்யாவை இந்த உலகத்திற்கு அழைத்து வந்ததற்கும் நன்றி பூஜா. இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவலை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், பூஜா குமார் - விஷால் ஜோஷி தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.