Advertisment

ஆன்லைன் மூலம் பாலியல் தொல்லை - பாஜகவில் இருக்கும் நடிகை புகார்

Actress Payel Sarkar complained to police that she received objectionable messages

பெங்காலி மற்றும் இந்தி மொழியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை பாயல் சர்க்கார். நடிப்பது மட்டுமல்லாது கடந்த 2021ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2021 மேற்குவங்க சட்டமன்றத்தேர்தலில் பெஹாலா பூர்பா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சில மாதங்களுக்கு முன், சமூக வலைத்தளம் மூலம் தனக்கு மோசமான குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் மீண்டும் வேறொரு நபரால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "என் செல்போனுக்கு அடிக்கடி ஆபாசத் தகவல்கள் வந்தது. அந்த எண்ணை சோதித்தபோது என் தூரத்து உறவினர் என்பது தெரியவந்தது. அவர் ஜிம் பயிற்சியாளர். உடனே அந்த நம்பரை பிளாக் செய்தேன்.

Advertisment

ஆனால், அவர் விடாமல் வேறொரு நம்பரில் இருந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பிய அவர் தனது விருப்பத்தை ஏற்கவில்லை என்றால் போட்டோஷாப் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். அதனை வைரலாக்கவும் செய்வேன் என மிரட்டினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபரிடம் பேசிய மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது புகாரோடு இணைத்து சமர்ப்பித்துள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe