Advertisment

பிரபல நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நடிகை பாயல் கோஷ்! 

payal gosh

பாயல் கோஷ் என்ற நடிகை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும்போது, ரிச்சா சட்டா மற்றும் சிலர் பட வாய்ப்புகளுக்காக அனுராக்குடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சட்டா, பாயல் கோஷ்மற்றும் அந்தப் பேட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல நீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் கொடுத்திருந்தது.

Advertisment

இந்நிலையில் பாயல் கோஷ், பேட்டியில் ரிச்சா சட்டாகுறித்து சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், ரிச்சாவிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய வழக்கறிஞர், மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "பாயல் கோஷ், ரிச்சா சட்டாவைப் பற்றிய அவதூறான கருத்துகளைத் திரும்பப்பெறுகிறார். ரிச்சாவிடம்நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார். மேலும், பாயல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற ஊடகங்களில் இதுபற்றி தெரிவித்த கருத்துகளை நீக்க முடிவு செய்துள்ளார். மேற்கொண்டு ரிச்சா பற்றிய எந்தவொரு தவறான கருத்துகளையும்கூற மாட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

anurag kashyap
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe