actress pavithra give case against youtube channels in Hyderabad cyber police

Advertisment

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'அயோக்யா', 'க/பெ ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும்நடிகருமான நரேஷை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியானது.

நடிகர் நரேஷ், இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோதுநரேஷின் 3வது மனைவி ரம்யாஅவர்களை அடிக்கப் பாய்ந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தன்னைப் பற்றி ஆபாசமான பொய்யான பரப்புரைகளை சில யூடியூப் சேனல்கள் மேற்கொண்டு வருவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை பவித்ரா. அந்தப்புகாரில் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நோக்கில் தன்னையும் நடிகர் நரேஷையும் மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டு எங்களைப் புண்படுத்தியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பவித்ரா அளித்த புகாரின் பேரில்போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.