Advertisment

நடிகை பார்வதி காவல் நிலையத்தில் புகார்

actress parvathy nair complaint about robbery held in his house

தமிழில் 'என்னை அறிந்தால்', 'உத்தம வில்லன்', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். கடைசியாக கடந்த வருடம் வெளியான '83' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில்உள்ள பகுதியில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி, செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரமும் , ரூ.3 லட்சம் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரமும், 50 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த நபர் திருடிச்சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisment

பார்வதி நாயரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

parvati nair
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe