/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_228.jpg)
பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் ராகவ் சதா எம்.பியுநீண்ட நாட்களாககாதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் உறுதிசெய்யப்பட்டு இன்று (13.05.2023) நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடைபெறுகிறது.
மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதற்காக அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
நிச்சயதார்த்த மோதிரம் 8 மணியளவில் மணமக்கள் மாற்றி கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பாலிவுட் திரை பிரபலங்கள் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்திபதிவிட்டு வருகின்றனர்.
Follow Us