actress Nora Fatehi slapped co actor in his first movie

பாலிவுட்டில் பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேகி. மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ரூ.200 கோடி மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் வழக்கில்நோரா ஃபதேகிக்கு தொடர்புடையதாகக் கூறப்பட்டு பலமுறை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தென்னிந்திய மொழிகளில் பிரபாஸின் 'பாகுபலி' மற்றும் கார்த்தியின் 'தோழா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பல்வேறு நாடுகளில் பல நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளார். கடைசியாக 'அன் ஆக்‌ஷன் ஹீரோ' படத்தில் 'ஜெஹ்தா நாஷா' பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

Advertisment

அப்பாடலை ப்ரொமோட் செய்வதற்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நோரா ஃபதேகி, அவர் நடித்த முதல் படத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். அவர் கூறுகையில், “வங்காள தேசத்தில் உள்ள சுந்தர்பன் காடுகளில் என் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரை நான் அறைந்துவிட்டேன். பதிலுக்கு அவரும் என்னை அறைந்தார். உடனே நானும் அவரை அறைய என் முடியை பிடித்து இழுத்தார். நானும் அவர் முடியை பிடித்து இழுத்தேன். அது பெரிய சண்டையாக மாறியது. பின்பு இயக்குநர் தான் வந்து தடுத்தார்" என சிரித்துக் கொண்டே கூறினார்.

நோரா ஃபதேகி, 2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ரோர்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் அபினவ், ஹிமர்ஷா வெங்கடசாமி, ஆசிம், சுப்ரத் தத்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.