Advertisment

நித்யா மேனன், பார்வதியின் பதிவு - வெளியான உண்மை தகவல்

actress nithya menen, parvathy post factual information released

தமிழ் சினிமாவில்சித்தார்த்தின் ‘180’ என்றபடத்தின் மூலம் அறிமுகமாகி வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில்நடித்து பிரபலமானவர் நித்யா மேனன். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'ஷோபனா' கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து மலையாளத்தில் 'ஆரம் திருகல்பனா' மற்றும் அஞ்சலி மேனன் இயக்கும் பெயரிடப்படாதபடத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில் நித்யா மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்துள்ளார். மேலும் "வொண்டர் ஆரம்பமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதோடு சில ரசிகர்கள் "கர்ப்பமாக இருக்கீறீர்களா...வாழ்த்துக்கள்" என கமெண்ட் செய்து வந்தனர். மேலும் சிலர் இது பட ப்ரோமோஷனுக்காக என்றும் கூறி வந்தனர். இதே போல் நடிகை பார்வதி, பத்மப்ரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா பிலிப் மற்றும் அம்ருதா சுபாஷ் உள்ளிட்டோர் பகிர்ந்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் ஒரு பட ப்ரோமோஷனுக்காக நடிகைகள் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் கர்ப்பிணி பெண்கள் வாழ்க்கையை மையப்படுத்தி 'வொண்டர் வுமன்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்குவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பார்வதி, நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணிநடிகைகள் நடிப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது. அதனால் இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தப் பதிவை பதிவிட்டுள்ளார்கள் என சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

parvathi Nithya menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe