/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/113_8.jpg)
நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " விவேக் சாருடன் பணியாற்றிய நினைவுகள் குறிப்பாக விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய நினைவுகள் எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கும். மிக விரைவில் சென்றுவிட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றதாக மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கக்கூடிய வலிமையை கடவுள் அவர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)