
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.
அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கும், ஊர்வசி ரவுடேலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், திரிஷா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை நக்மா தனக்கு விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.