
கடந்த 2014ஆம் ஆண்டு 'அமர காவியம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதன்பின் தொடர்ச்சியாக பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் அறிமுகமான மியா, அங்கேயும் தொடர்ந்து நடித்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் ஃபிலிப் என்கிற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மியா ஜார்ஜ், அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
கடந்த திங்கட்கிழமை, கேரளாவின் பலை என்ற பகுதியில் இருக்கும் புனித அந்தோணி தேவாலயத்தில் மியா- அஷ்வின் நிச்சயதார்த்தம் நடந்தது. கரோனா கட்டுப்பாடுகளால் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.