பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாகஇருப்பவர்மெஹ்ரீன் ஷா. இவர்பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படத்தயாரிப்பாளர்ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த இயக்குநர்அஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன்எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "நான்அஜர்பைஜான் தலைநகர்பாகுவில்எஹ்சான் அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோருடன் ஒரு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன்இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. அவர்களின் கோரிக்கையை நான் ஏற்க மறுத்ததால், அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தாவுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது.
ஆனால், அவர்கள்இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்களாஎன்பது தெரியவில்லை. இந்தியத்தயாரிப்பாளர்ராஜ் குப்தாஎன்னிடம் நெருங்கிப் பழக முயன்றார்.ஆனால், நான் திட்டவட்டமாக மறுத்ததால், அவரது பாணி முற்றிலும் மாறிவிட்டது. அவர் எனக்கு உணவு கூட கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின் போது எனது உடல்நிலை மோசமடைந்தது.இன்னும் அவர் என்னைப் பார்க்கவில்லை.
இதையெல்லாம் சொல்வதன் நோக்கம் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே. நான் அஹ்சான் அலி ஜைதியுடன் முதல் முறையாக வேலை செய்கிறேன். இதே போல் வேறு எந்த நடிகைகளும் இவர்களால்பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமுடன் உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவர்களுடன் எந்த நடிகையாவது பணிபுரிய விருப்பப்பட்டால் அவர்களைநான் எச்சரிக்க வேண்டும்.
அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோர் இரவில் தங்கள் அறைகளில் பாலியலில் ஈடுபட அழைக்கிறார்கள். தற்போது பாகிஸ்தானுக்குத்திரும்ப டிக்கெட் கூட வழங்கப்படவில்லை. இருவரின் செயல்பாடுகளால் மிகவும் மனஉளைச்சலுக்குஆளாகியுள்ளேன். இவர்களைமீறி டிக்கெட் பதிவுசெய்தால்அதனைகேன்சல் செய்துவிடுவார்களோஎன்ற அச்சத்திலும் உள்ளேன்" என்றார்.