Advertisment

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

actress meera jasmine after long time starring tamil movie

Advertisment

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானமீரா ஜாஸ்மின் நடிகர் விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சிநேயா, விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 'விஞ்ஞானி' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பல தமிழ் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகி வருகிறார். விரைவில் இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைதொடர்ந்து தனது ரசிகர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

meera jasmine tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe