உலகம் முழுக்க கரோனாவைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கரோனா வைரஸ் பரவலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடாகஅமெரிக்கா உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானைசேர்ந்தநடிகைமீராஅமெரிக்காவில் சிக்கிக்கொண்டுள்ளார். தன்னை மீட்குமாறு பாகிஸ்தான்பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசியிருக்கும் வீடியோவில் "ஒரு மாதத்திற்கு முன்பாக நானும் படக்குழுவினரும், மற்ற நடிகர்களும் அமெரிக்காவந்தோம். கரோனாகாரணமாகபடத்தில்நடித்த நடிகர்கள் பாகிஸ்தான் திரும்பி விட்ட நிலையில், நான் மட்டும் இங்குமாட்டி உள்ளேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. நியூயார்க் முழுவதும் சுடுகாடாக மாறி உள்ளது. நான் அந்நிய நாட்டில் இறப்பதை விரும்பவில்லை. தாங்கள் எப்பொழுதும் கலைஞர்களுக்கு சிறந்த மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் மற்ற நாடுகள் தங்களது குடிமக்களை சொந்த நாட்டிற்கு வரவழைப்பது போல,என்னையும் தாய்நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.