Advertisment

24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேரும் மீனா!

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்குள் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

meena

விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் தள்ளிப்போனதால் ரஜினியின் படத்தை எடுக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

ரஜினியின் 168வது படமாக உருவாக இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனையடுத்து மேலும் ஒரு கதாபாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை மீனா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

meena rajnikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe