actress meena and her family tested positive covid19

Advertisment

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது.

அந்த வகையில் நடிகை மீனா உள்படஅவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலை தனது சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்த நடிகை மீனா, "2022 ஆம் ஆண்டு எனதுவீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் அதை நான் இருக்க விடப்போவதில்லை. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். இந்த வைரஸை பரவ விடாதீர்கள், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.