Advertisment

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்

actress maya son passed away

கவர்ச்சி நடிகையான மாயா சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவர், அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தையும் ஆவார். இவருக்கு விக்கி என்கிற விக்னேஷ் என்ற ஒரு மகனும் (37), 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகக்கூறப்படுகிறது.

Advertisment

இதனால் தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தனது படுக்கையறையில் மர்மமான முறையில் விக்னேஷ் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருகம்பாக்கம் போலீஸார் விக்னேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 8 பேர் கொண்ட மர்ம நபர்களால் விக்னேஷ் வெட்டப்பட்டு படுகாயமடைந்து, பின்பு தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் மேல் பல குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகையின் மகனும் பிரபல ரவுடியுமான விக்னேஷ் மர்மமான முறையில் இறந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

passed away Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe