actress malavika avinash in hospital

மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தொடர்ந்து பைரவா, கைதி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டில் பாஜக-வில் இணைந்து தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "உங்களில் யாருக்காவது ஒற்றைதலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Advertisment