Lijomol Jose

'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவர், இயக்குநர் சசி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது, தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

Advertisment

இவை தவிர்த்து, பல மலையாள படங்களில் பிசியாக நடித்துவரும் லிஜோமோல் ஜோஸ் நேற்று (05.10.2021) திருமணம் செய்துகொண்டார். கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், அருண் ஆண்டனி என்பவரை அவர் கரம் பிடித்தார். இந்தத் திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Advertisment

லிஜோமோல் ஜோஸ் - அருண் ஆண்டனி தம்பதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.