Advertisment

நடிகை வனிதா திருமண விவகாரம்: லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்!

lakshmi ramakrishnan

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.

Advertisment

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, அவர் தங்களிடம் இருந்து பணம் பெறவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனைச்சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் இயக்குனருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “தற்போதுதான் இந்தச்செய்தியைப் பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எப்படிப் படிப்பும், புகழ் வெளிச்சமும் உள்ளவர் இப்படியான ஒரு தவறை செய்ய முடியும்? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவருடைய முதல் மனைவி ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை?” என்று குறிப்பிட்டுள்ளார்.

lakshmi ramakrishnan vanitha vijayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe