actress lakshmi manju adopted government schools

தெலுங்கில் மூத்த நடிகராக இருக்கும் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளினியாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 30 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் மேலும் 20 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். தெலுங்கானாவில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள 20 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த அவர், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.