/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/174_14.jpg)
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தமிழில் முதல் முறையாக வாங்கியவர் நடிகை லக்ஷ்மி. சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பின்பு அடுத்த தலைமுறையினர் நடிகர்களின் படத்தில் குணச்சித்திர படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை லக்ஷ்மி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக லக்ஷ்மி தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "நான் ரொம்ப நல்லாவே இருக்கேன். பிறந்து விட்டால் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது எனத் தெரியவில்லை.
எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப்போய் போன் போட்டு காலையிலிருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும், திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். என் மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும்போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லக்ஷ்மி மறைந்த செய்தியைநடிகை லட்சுமி மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இப்போது 69வயது ஆகும் லட்சுமி வருகிற 13ஆம் (13.12.2022) தேதி 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)