Skip to main content

13 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்த நடிகை கொலை வழக்கு

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
actress laila khan case update

2011ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கானின் தந்தை தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் பல மாதங்களாக விசாரணை நடத்தினர். பின்பு லைலா கானின் தாயார் செலினாவின் 3வது கணவர் பர்வேஸ் தக்கை இந்த வழக்கு தொடர்பாக லைலா கானின் தாயார் செலினாவின் 3வது கணவர் பர்வேஸ் தக்கை போலீஸார் கைது செய்தனர்.   

அவரை கைது செய்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் தான் சொத்து தகராறு காரணமாக நடிகை லைலா கான் மற்றும் அவரது தாயார், 4 உடன் பிறந்தவர்களை மஹாராஷ்ட்ரா நாசிக்கில் உள்ள பங்களாவில் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொன்ற உடல்களைப் பங்களா நிலத்தில் புதைத்து பின்பு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பங்களாவில் அழுகிய நிலையில் லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது பெரும் பரபரப்பைக் கிளப்ப இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தக் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சச்சின் பவார் கடந்த 9ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில் 13 வருடங்களுக்குப் பிறகு இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. பர்வேஸ் தக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்