Advertisment

16 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்தி படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் சூர்யா பட நடிகை

Advertisment

actress laila joins karthi starring sardar film

90-களில் தன் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை லைலா. நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் கடைசியாக ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பிறகு திருமணமாகி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisment

இந்நிலையில், 16 ஆண்டிற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியிருந்தார். தனிப்பட்ட காரணங்களால் தற்போது சிம்ரன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக லைலா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரும்புத்திரை, ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் பேனரில் லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

actor karthi Sardar viruman
இதையும் படியுங்கள்
Subscribe