actress khushboo in hospital

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010 ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் பூரண குணமடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்பவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.