தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காவிய தாபர் தமிழில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் வெளியான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தில் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது நடிகை காவ்யா தாபர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காவ்யா தாபரிடம்விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் கார் ஒட்டியதுதெரியவந்தது. இதன் பிறகு காவ்யா தாபரைகாவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், கைது செய்ய வந்த பெண் போலீசாரின் சீருடையை இழுத்து பிரச்சனைசெய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவ்யா தாபரைகைது செய்த மும்பை காவல்துறையினர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பணியில் இருந்த காவல் அதிகாரியை தாக்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டகாவ்யா தாபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.