இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் பட நடிகை...

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'கண்ணுக்குள் நிலவு', 'சமுத்திரம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் கல்யாணி. தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

kaveri kalyani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஹோலி பண்டிகையை முன்னிட்டு இப்படம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார் கல்யாணி. அதில், “நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘K2K புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குநர் - தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் இந்தப் புதிய முயற்சிக்கும் உங்களது அன்பும் ஆதரவும் நல்குமாறு வேண்டுகிறேன். ‘K2K புரொடக்‌ஷன்ஸ்’ சார்பாக எங்களது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் டீஸர் கிளிம்ஸை இயக்குனர் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

actor vijay Actress
இதையும் படியுங்கள்
Subscribe