Skip to main content

“அவருடைய அனைத்து கருத்துகளோடும் நான் ஒத்துப்போகவில்லையென்றாலும்”- நடிகை கஸ்தூரி 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
kasathuri

 

 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக 'ஆறுதல்‌' சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர்‌ அச்சம்‌ மிகுந்த பேரிடர்‌ காலத்தில்கூட, மாணவர்கள்‌ தேர்வெழுதி தங்கள்‌ தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்‌ சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்‌ நிதர்சனம்‌ அறியாதவர்கள்‌ கல்விக்‌ கொள்கைகளை வகுக்கிறார்கள்‌. கரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது. 'தேர்வு பயத்தில்‌ மாணவர்‌ தற்கொலை' என்ற செய்தி, அதிகபட்சம்‌ ஊடகங்களில்‌ அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின்‌ மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளை கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்‌, 'அனல்‌ பறக்க' விவாதிப்பார்கள்‌.

 

நீட்‌ போன்ற 'மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள்‌ பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும்‌ வயிற்றிலும்‌ அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள்‌ தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின்‌ நலன்‌ மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம்‌ கல்வி முறையில்‌, இனி பெற்றோர்களும்‌, ஆசிரியர்களுமே விழிப்புடன்‌ இருக்க வேண்டும்‌. நமது பிள்ளைகளின்‌ தகுதியையும்‌ திறனையும்‌ வெறும்‌ தேர்வுகள்‌ தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்‌ தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள்‌ வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும்‌ தயார்படுத்த வேண்டும்‌. அன்பு நிறைந்த குடும்பம்‌, உறவு, நண்பர்கள்‌ சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின்‌ முடிவுகள்‌ அற்பமானது என்பதை உணர்த்துவது முக்‌கியம்‌. மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்‌. இதையெல்லாம்‌ கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட்‌ போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்‌திருக்கிறார்கள்‌.

 

ஒரே நாளில்‌ 'நீட்‌ தேர்வு' மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌ மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற 'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌" என கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இந்த பதிவு குறித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, “சமீப காலமாக, சூர்யா பலமுறை, பொதுபுத்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருடைய அனைத்து கருத்துகளோடும் நான் ஒத்துப்போகவில்லையென்றாலும், அவரது நேர்மையான அக்கறை, தைரியம், தீர்மானம் ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.

Next Story

“மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை” - வசை பாடிய கஸ்தூரி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
kasthuri about kamal mnm stand in lok sabha election

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, அவர்கள் தலைமையில் ஒரு தனி கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கிறது.  

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் உள்ளிட்ட தி.மு.க முன்னணி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். மேலும் “மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  

இந்த நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்பிற்கு கஸ்தூரி கடுமையாக அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கமல்ஹாசன் திமுகவிடம் விலை போனதில் ஆச்சரியமில்லை. அவர் மிகவும் மலிவாக ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு விலை போனது தான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை. சோகமான விஷயம் என்னவென்றால், அவர் எளிதில் ஜனாதிபதி நியமன எம்.பி.யாகிவிட்டார். அவர் மிகவும் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.