Advertisment

அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்... ஐடியா கொடுத்த கஸ்தூரி...

விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸை கேலி செய்யும் வகையில் #ஆகஸ்ட்_8_பாடையகட்டு என்றொரு ஹேஸ்டேகை டேக் செய்தனர்.

Advertisment

kasthuri

இதனையடுத்து அஜித் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #RIPActorVijay என்று ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது இந்தியளவில் ட்ரெண்டானதால் பல பிரபலங்களும், மற்ற மாநிலத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உள்பட பல பிரபலங்கள் #LongliveVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இது இந்தியளவில் ட்ரெண்டாக தொடங்கியது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி இவ்விரு ரசிகர்களும் மோதிக்கொள்ளாமல் இருக்க ஒரு ஐடியா ஒன்றை கொடுத்து பதிவிட்டுள்ளார்.

“விஜய், அஜித் ரசிகர்கள் எந்த ஒரு விஷயத்தையும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யக்கூடியவர்கள். நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித், தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

actor vijay ajith kasthuri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe