Advertisment

‘முத்தமிட்ட மூச்சுக் காற்று…’ - திருமண மகிழ்ச்சியில் கார்த்திகா

actress karthika nair marrriage

பிரபல நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர் ஜீவா நடித்த கோ படம் மூலம் தமிழ் சினிமாவில்நடிகையாக அறிமுகமானார். பின்பு பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்தார். இதனிடையே தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தினார். பின்பு கடைசியாக, எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக அவர் சினிமாவில் பயணிக்க வழி வகுக்கவில்லை. அதனால் சினிமாவிலிருந்து விலகினார்.

Advertisment

இந்த நிலையில் அவருக்கும் ரோகித் மேனன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று இருவருக்கும் கேரளா திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராஃப், ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், ரேவதி, மேனகா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Advertisment

celebrity marriages Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe