actress karate kalyani complained against music director devi sri prasad

பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்சமீபத்தில் 'ஓ பாரி'(O Pari) என்ற இந்தியாவின் முதல் பான்-இந்தியன் பாப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்பாடலை இவரே பாடி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யூ-ட்யூபில் வெளியான இப்பாடல் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இப்பாடலில் வரும் 'ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா' என்ற இந்துக்களின் வரிகள்ஆபாசமான காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள சைராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ‘ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா’ என்ற ஸ்லோகத்தை இந்துக்களின் புனித கடவுளான ராமரை வணங்கும்போது நாங்கள் பயன்படுத்துவோம். அந்த ஸ்லோகத்தை ஆபாசமான காட்சிகள் நிறைந்த பாடலில்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் இந்துக்களைப் புண்படுத்தியதற்காகக்தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவர் கொடுத்தபுகாரின் பேரில் தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்குத்தொடரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.