Advertisment

“சிவனும் சக்தியும் நானே” - தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை

actress Kanishka Soni who married herself

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் குஜராத்தைசேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Advertisment

இந்நிலையில் பவித்ரா ரிஷ்தாமற்றும் தியா அவுத்பாத்தி ஹம் உள்ளிட்ட இந்தி சீரியல்களில்நடித்து பிரபலமானவர் நடிகை கனிஷ்கா சோனி. சமீபத்தில் நடிகை கனிஷ்கா சோனி நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனைபார்த்த ரசிகர்கள் இது ஏதாவது சீரியலுக்கானகெட்டப்பா அல்லது உண்மையாகவே திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

Advertisment

இதற்குநடிகை கனிஷ்கா சோனி தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். எனது கேள்விக்கான பதில் என்னிடமே உள்ளது. எனக்கென்று ஒரு ஆண் துணை தேவையில்லை. நான் எனது கிட்டருடன்(இசைக்கருவி) இருக்கும் போது மகிழ்ச்சியாக தான்இருக்கிறேன். நான் தெய்வம் சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியது.

இதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பேசிய கனிஷ்கா, "என்னுடைய திருமண முறை குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கவில்லை. திருமணம் என்பது வெறும் உடலுறவு கொள்வது மட்டும் அல்ல. அதில் அன்பும், நேர்மையும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நினைத்தபடி என் வாழ்நாளில் இது வரை எந்த ஒரு ஆணையும் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்தான் தனியாக வாழ முடிவு செய்து என்னையே நான் திருமணம் செய்து கொண்டேன். சிலர் என்னுடைய பதிவை பார்த்துவிட்டு போதையில் பேசுவதாககூறுகிறார்கள். அப்படிஇல்லை நான் முழு மனதுடன் தான் இந்த முடிவை எடுத்தேன். தற்போது ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

marriage serial actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe