/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/133_20.jpg)
நடிகர் பிரசன்னா அறிமுகமான 'பைவ் ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து 'ஆட்டோகிராப்', 'வரலாறு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் பல படஙக்ளில் நடித்துள்ள கனிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கனிகா கடைசியாக தமிழில் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான 'பாப்பான்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி காலில் கட்டுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த கட்டுடன் நடக்க பழகி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)