நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொலை மிரட்டல்

Actress Kangana Ranaut death threats

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள்ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் இவர் சமீபத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். குறிப்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளை காலிஸ்தான்தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c128e936-16bb-45dd-a8ff-aa6520065545" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_12.jpg" />

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையைத்தில்புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், " தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. ஒருவர் என்னை கொலை செய்துவிடுவதாக வெளிப்படையாக மிரட்டியுள்ளார். இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நாட்டிற்கு எதிராகப் பேசுபவர்களுக்கு யாராயினும் அவர்களுக்கு எதிராகதொடர்ந்து குரல் கொடுப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Subscribe