Advertisment

"விஸ்கி குடிக்க அறைக்கு வர சொன்னார்" - தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு

Actress Jennifer Mistry Bansiwal Accuses producer asit modi

பாலிவுட்டில் 'க்ராஸி 4', 'ஏர் லிஃப்ட்' உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். திரைப்படங்களைத்தாண்டி தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்தார். தொலைக்காட்சியில்2008 முதல் ஒளிபரப்பான 'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா' (Taarak Mehta Ka Ooltah Chashmah) என்ற தொடரில் நடித்து வந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

இந்த நிலையில் இத்தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும் இத்தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார்மோடி மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒருமுறை அசித் குமார் மோடி என்னிடம் என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு நான் தைரியமாக விஸ்கி என்று சொன்னேன். இதற்குப் பிறகு, தன்னுடன் விஸ்கி குடிக்க வருமாறு பலமுறை கேட்டுள்ளார்.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு எங்கள் படக்குழு முழுவதும் சிங்கப்பூர் சென்றோம். அந்த பயணத்தின் போது, ​தயாரிப்பாளர் ​விஸ்கி குடிக்க அவர் அறைக்கு வரச் சொன்னார். இதை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன். பிறகு ஒரு நாள் கழித்து, ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.நான் உன்னைப் பிடித்து முத்தமிட விரும்புகிறேன்' என்றார். இதைக் கேட்ட நான் பயத்தில் நடுங்கினேன். மேலும் ஒருமுறை ‘உங்களுக்கு இரவில் ரூம் பார்ட்னர் இல்லையென்றால்என் அறைக்கு வந்து விஸ்கி குடியுங்கள் என கூப்பிட்டார்" எனப் பேசியுள்ளார்.ஆனால் தயாரிப்பாளர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Actress film producer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe