Advertisment

"என்னைத்தவிர வேறு யாரையாவது நாயகியாக நடிக்க வைத்தால்..." - இயக்குநருடன் சண்டை போட்ட ஜனனி

actress janani talk about koorman movie

இயக்குநர்பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூர்மன்'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர்படமாக உருவாகியுள்ள இப்படத்தை எம் என்டர்டைமெண்ட்நிறுவனம் தயாரித்துள்ளது. டோனிபிரிட்டோ இசையமைத்துள்ள இப்படத்தின்ட்ரைலர்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தை விளம்பரப்படுத்தும்பணியில் இறங்கியுள்ள படக்குழு நேற்று (4.2.2022) பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது. ஜனனி, பாலசரவணன் உள்படபடக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் குறித்த தகவலைபகிர்ந்துகொண்டனர்.

Advertisment

அப்போது பேசிய நடிகை ஜனனி,"பிரையன் பி.ஜார்ஜை"தெகிடி"படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும் போது வேறு யாரையாவது நாயகியாக நடிக்க வைத்தால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்த கதை வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும். ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம். ஒரு காட்சியை மழையில் எடுத்தால் எல்லா காட்சிகளையும்மழையில் எடுக்க வேண்டும். அதனால் மழை நின்றுவிடக்கூடாதுஎன நினைத்தோம். ஆனால் கடவுள் ஆசீர்வாதத்தால் மழை நிற்காமல் இருந்தது.அந்த ஆசீர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

koorman actress janani iyer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe