janani

Advertisment

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த தொடர் 'செம்பருத்தி'. இதில் கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல அகிலாண்டேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தின் 2 -ஆவது மருமகளாக நடித்திருந்தவர் ஜனனி அசோக்குமார். இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தனது யூ-ட்யூப் சேனலில், லைவில் ரசிகர்களுக்குஅழகு குறித்த டிப்ஸ் தெரிவித்து வந்தார் ஜனனி அசோக்குமார். அப்போது திடீரென கட் செய்துவிட்டு, மீண்டும் லைவில் ரசிகர்களிடம் உரையாடியவர் கதறி அழுகத் தொடங்கினார்.

Advertisment

செம்பருத்தி சீரியலில் இருந்து தனக்கு ஃபோன் கால் வந்ததாகவும், இனி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்து அழுதுகொண்டே இருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்குத் தெரியும். இனிமேல் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பவருக்கு உங்களது ஆதரவைக் கொடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே, "திடீரென தான் நீக்கப்பட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை" என்றும் இதை எதிர்பார்க்கவில்லை எனவும்கூறிகதறி அழுதுள்ளார்.